search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் சாவு"

    • கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.
    • மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ பள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் பருத்திக்காடு பகுதியில் இருந்து அருகில் உள்ள வாழைத் தோப்பிற்கு கடந்து செல்ல மான் ஒன்று வேகமாக ஓடியது.

    அப்போது மானின் தலையில் உள்ள கொம்பு வாழை தோப்பிற்கு பாதுகாப்பாக சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.

    இது பற்றி மாரியம்பட்டி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறை அதிகாரியான சாக்கன் சர்மா தலைமையில் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அபள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா்.
    • இறந்தது 1½ வயதுடைய பெண் மான் என தெரிய வந்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச்சரகத்தில் உள்ள தேவாலா-கூடலூா் செல்லும் நெடுஞ்சாலையில் கடமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா். பின்னா் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், மானை பிரேதப் பரிசோதனை செய்தாா்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 1½ வயதுடைய பெண் மான் எனவும், சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனா்.

    • ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் விரட்டி குதறியது
    • தண்ணீர் தேடி வருவதை தடுக்க நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரிமலை காப்பு காட்டில். மான், மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கிறது.

    அவ்வப்போது மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் மலை அடிவாரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைகிறது. அப்போது நாய்கள் கடித்து மான்கள் இறந்து போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொன்னேரி அருகே மலை அடிவாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்தது.

    அப்போது அங்கிருந்த நாய்கள் அதனை விரட்டி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.

    ×